Monday, September 27, 2010

அபுதாபியில் எழுச்சியை ஏற்படுத்திய இப்தார் நிகழ்ச்சி

28-08-2010 அன்று அபுதாபி முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் இப்ஃதார் சிறப்பு நிகழ்ச்சி கேரளா சேஷியல் சென்டரில் நடைபெற்றது. அபுதாபில் பரப்பளவில் பரந்து வாழும் தமிழ் சகோதரர்களுக்கு அழைப்பு கொடுப்பதற்காக கடந்த 10 தினங்களுக்கு முன்பாக மூகைதீன், நாசர், அப்துல்லாஹ், சுஜாவுதீன், இஸ்மாயில், ரசூல், அஹமது மற்றும் இர்பான் ஆகியோர் இரண்டு குழுக்களாக பிரிந்து பம்பரமாக சுற்றி அபுதாபின் அனைத்து பகுதியிலும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிக்கு வருமாறு தமிழ் சகோதரர்களுக்கு அழைப்பு கொடுத்தனர் மேலும் சனையா பகுதியிலும் தாஜுதீன், நிஜாமுதீன், ரஹ்மான், முபாரக், பதுஷா, சல்மான், மற்றும் இம்ரான் குழுக்களாக பிரிந்து ரமலான் சிறப்பு நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு கொடுத்தனர் மேலும் பணியாஸ் பகுதியிலும் மௌலவி. கரீம், ராஃபி, செய்யது அலி, ஹாஜா மூகைதீன், ஃபிர்தவுஸ் ஆகியோர்கள் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி வருமாறு அழைப்பு கொடுத்தனர் தூரத்திலிருந்து வருபவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது.

28-08-2010 அன்று காலை முதல் உஸ்மான், அப்துல்லாஹ் மற்றும் ஸ்டீஃபன் ஆகியோர்கள் இப்தார் உணவு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொண்டு இருந்தனர்.

மாலை 4: 30 மணியானது சகோதரர்கள் குழுக் குழுவாக வரத்துவங்கினர் இவர்களை அன்புடன் வரவேற்பதர்காக மௌலவி. இஸ்மாயில்ஷா தலைமையில் இஃப்திகார், ரிஃபாய், ஜாஃபர், ஃபஜர் முகம்மது, சலீம் மற்றும் சாதிக் கேரளா சேஷியல் சென்டர் வாசலில் இருந்து வரவேற்று நிகழ்ச்சி அரங்கத்திற்கு சகோதரர்களை அழைத்து சென்றனர்.


மாலை 5:00 மணியளவில் மௌலவி. இஸ்மாயில்ஷா கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். தலைமையுரையில் மௌலவி. ஹிதாயத்துல்லாஹ் நூரி பதுரு போர் தியாகங்களை நினைவு கூறினார்கள் தொடர்ந்து அமீரக நிர்வாகிகள் உசைன் பாஷா மற்றும் அப்துல் ஹாதி உரையாற்றினார்கள்.


தாயகத்தில் இருந்து வருகை தந்த சிவகாசி முஸ்தபா நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் சிறப்பான உரையாற்றினார் த மு மு க கொள்கை பாடல் 'உதயமானது உதயமானது த மு மு க' என்ற பாடலை கீழை. இர்பான் பாடினார் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி நபி வழி நாம் வழி என்ற தலைப்பில் சகாபாக்களின் தியாகங்களும் இன்றைய தமிழக முஸ்லீம்களின் நிலைபாடுகளும் என்ன என்று விளக்கி கூறி மேலும் இன்றை தமிழத்தின் நிலைபாடுகளை விளக்கமாக உரையில் கூறி அதனை த மு மு க மற்றும் அரசியல் பிரிவான ம ம க எடுத்துவரும் நடவடிக்கை என்ன என்ன என்று அவர்களுக்கு இறைவன் வழங்கி நலினமான பேச்சாற்றளின் மூலமாக பமரனும் விளங்கும் வன்னம் சிறப்பான விளக்கி உரையாற்றினார்.


இப்தார் நேரம் வந்தவுடன் நோன்பாளிகளான அனைத்து சகோதரர்களும் இவ்வுரைகளின் மூலம் அறிவு பசி நிரைந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் இப்தார் கடமையை நிரைவேற்ற இப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்ட வளாகத்தில் அமர தொடங்கினர். இப்தார் உணவும் மகரிபு தொழுகையும் நிரவேற்றிவிட்டு மீண்டும் அனைத்து சகோதரர்களும் ஆர்வமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகாக அரங்கத்தில் அமந்தனர் அதிமுக உடன் ஊட்டணி குறித்து பல கேள்விகனைகள் வந்தன ம ம க கூட்டணி பதவிக்காக மட்டும் இல்லை. பதவி ஆசைக்காக மட்டும் நம் நிலைபாடு என்றால் நம்மிடம் இருந்து வந்த வக்பு வாரிய தலைவர் பதவியை இழந்து இருக்க மாட்டோம்


மேலும் திமுக சின்னத்தில் நிற்க வேண்டும் என்று ஒரு ஆP சீட்டு தந்ததை வேண்டாம் என்று விட்டு இருக்க மாட்டோம்;

மேலும் ஒரு சவுதி அரபியாவின் தூதர் பதவியை இழந்து இருக்க மாட்டோம்

மேலும் ஒரு யுனியன் பகுதி கவர்னர் பதவியை இழந்து இருக்க மாட்டோம்

மேலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என்று இரண்டு ஆP சீட்டு தந்ததை வேண்டாம் என்று விட்டு இருக்க மாட்டோம்

இத்தனை பதவியையும் இழந்த காரணம் ஒன்றே ஒன்று தான் அரசியலை மாற்றி அமைப்போம் அதிகாரத்தில் பங்கெடுப்போம் என்ற முலக்கத்தை நிலைநிருத்த வேண்டும். மேலும் தமிழக அரசியலில் வெற்றிடமாக உள்ள முஸ்லீம்களின் பங்கை இன்ஷா அல்லாஹ் ம ம க நிரப்பும் என்று கூறினார்கள் அரங்கம் அதிரும் அளவிற்கு அல்லாஹ் அக்பர் என்ற முலக்கம் எழுந்தது.மேலும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே நீண்டு சென்றது கடைசி வரையிலும் கூட்டம் கலையவில்லை நோன்பு மாத சிறப்பு தொழுகையான தராவிஹ் கலந்து கொள்ள வேண்டும் என்ற முக்கிய துவத்தால் இஷா பங்குடன் நிரைவுற்றது. இந்த நிகழ்ச்சியில் 500 அதிகமான சகோதரர்களும்; மேலும் அனைத்து சகோதர அமைப்பு நிருவாகிகளும் கலந்து கொண்டனர்


வாகன வசதியில்லாத இடங்களிலிருந்து வரமுடியாத சகோதரர்கள் தங்களது பகுதிகளுக்கு தலைமை நிர்வாகிகள் வரவேண்டும் என அலைபேசியில் ஆர்வம் தெரிவித்தனர்.


நன்றி : சகோ.ஹுசைன் பாஷா

Wednesday, September 8, 2010

அபுதாபி சிட்டியில் புதிய கிளை


27-08-2010 அன்று அபுதாபி முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி ஆகியோர் மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி உரையாற்றினார்கள் நிகழ்ச்சியின் இறுதியில் புதிய நிர்வாகம் மாநில துணை பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி தலைமையில் தேர்ந்து எடுக்கப் பட்டது.


தலைவர் : தோப்புதுரை. ரசூல் முகம்மது


செயலாளர் : சிதம்பரம் புதகேணி.சுஜாவுதீன்


பொருளாளர் : ராம்நாட். இஸ்மாயில்


துணைத்தலைவர் : இருமேனி. மௌலவி. இஸ்மாயில்ஷா

துணைச்செயலாளர் : ராஜபாளயம். சேக் முகம்மது,

கீழை. அஹமது அப்துல் காதர்


மக்கள் உரிமை பொறுப்பாளர் : மதுரை.முகைதீன்


மக்கள் தொடர்பாளர் : கீழை. ஹசன் அஹமது ரிஃபாய்


செயல் குழு உறுப்பினர்கள் :

செஞ்சி. செய்யது இஃப்திகார்,
தேரிளந்தூர். அப்துல்லாஹ்,
காயல் பட்டிணம் . முகைதீன்,
காயல் பட்டிணம் . லெப்பை தம்பி,
கீழை. சாதிக் ,
தேரிளந்தூர். ஃபஜர் முகம்மது.