Sunday, August 5, 2012

த.மு.மு.க அபுதாபி நகர கிளை சார்பாக தர்பியா நிகழ்ச்சி

கடந்த 03 - 08 - 2012 அன்று வெள்ளி கிழமை சரியாக ஜும்மாவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.  துணை செயலாளர் கீழை அஹ்மத் அவர்கள் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். சிதம்பரம் சுஜஜாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் கீழை இர்பான் அவர்கள் தர்பியாவின் நோக்கம் என்ற தலைப்பில் துவக்க உரை நிகழ்த்தினார். 

அடுத்து திருச்சி அப்துல் ரஹ்மான் அவர்கள்  இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள  த.மு.மு.க மாநில செயலாளர் தருமபுரி சாதிக் பாஷா அவர்கள் சுயபரிசோதனை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிர்வாகிகள் கருத்துரைக்கையில் இது போன்ற நிகழ்ச்சி மாதம் ஒரு முறை அவசியம் என்று கூறினார்கள். அபுதாபி நேஷனல் எளிவேட்டர் நிறுவனம் சார்பாக மிகவும் சிறப்பாக இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Saturday, August 4, 2012

சரித்திரம் படைத்த அபுதாபி தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி

சரித்திரம் படைத்த அபுதாபி தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி மண்டலம் தமுமுக சார்பாக கடந்த 02-08-2012 வியாழக் கிழமை அன்று கேரளா ஷோசியல் சென்டரில் நடைபெற்றது. இருமேனி ஆலிம் இஸ்மாயில் குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அபுதாபி மண்டல துணைத்தலைவர் அபுல் ஹசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அபுதாபி மண்டலம் தமுமுக செயலாளர் கீழை இர்பான் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி அமீரக பொதுச்செயலாளர் கட்டிமேடு நூருல்லாஹ் அபுதாபி மண்டல தமுமுக பொருளாளர் கீழை சாதிக் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


திருச்சி அப்துல் ரஹ்மான் இறையச்சத்தை அதிகரிப்போம் என்ற தலைப்பிலும் ஏ.எஸ்.இப்ராஹிம் பித்ராவின் அவசியம் என்ற தலைப்பிலும், ஐக்கிய அரபு அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்.


தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் தமுமுக மாநில செயலாளர் தர்மபுரி சாதிக் அவர்கள் நேர்வழி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அபுதாபி மண்டல தமுமுக துணை செயலாளர் முகவை இஸ்மாயில் அவர்கள் நன்றி உரை நிகழ்த்த, இறுதியாக துஆ ஓதி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்புகள்

•   வேலை நாளில் நடத்தப் பட்டது.
வெப்பத்தையும் பொருட்;படுத்தாமல் தமுமுக நிகழ்ச்சிக்காக மக்கள்    திரண்டனர்
பிரதான சாலையிலிருந்து அரங்கம் வரை வரவேற்பு குழவினர்
நோன்பு துறப்புக்காக மிகசிறப்பான உயர்தர உணவு ஏற்பாடுகள்

தொழில் அதிபர்கள், அனைத்து சகோதர அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் மக்களும் 300 க்கும் அதிகமானோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை உஸ்மான்மவ்லவி இஸ்மாயில்ஷா, மொய்தீன்,  சாதிக், அஹ்மத் மற்றும் ஸ்டிஃபன் ஆகிய குழுவினர் 10 தினங்களாக கடுமையாக பணி செய்து மக்களை அழைத்தனர்.

 அல்ஹம்துலில்லாஹ்!