Sunday, May 20, 2012

தமுமுகவின் அமீரக செயற்குழு

தமுமுகவின் அமீரக செயற்குழு


மண்டல நிர்வாகிகள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகு தங்களது மண்டல செயற்பாடுகளை விளக்கினர். அதோடு எதிர்கால செயல்பாடுகளின் திட்டமிடல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
அமீரக தலைவர் அதிரை.அப்துல் ஹாதி அவர்களும், அமீரக செயலாளர் யாசின் நூருல்லாஹ் அவரகளும் அமீரகத்தில் தமுமுக கடந்துவந்த பாதைகளையும், பலவேறு சகோதர்களின் தியாகத்தையும் சுட்டிக்காட்டியதோடு, மிகப்பெரிய இடையூறுகளுக்கு மத்தியிலும், பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் அமீரகத்தில் இயக்கம் கட்டமைக்கப்பட்ட வரலாறையும் எடுத்துரைத்தார்கள்.

இரவு முதல் ஃபஜ்ரு வரை நடைபெற்ற செயற்குழுவில் அமீரகத்தின் செயற்பாடுகள் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து மாபெரும் நீண்ட விவாதம் நடைபெற்றது. நெடிய விவாதத்தின் இறுதியில் அமீரக செயற்குழு உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தில் தற்பொழுது இயங்கிகொண்டிருக்கும் அதே நிர்வாகம் மீண்டும் நீடிப்பது என்றும் அமீரக நிர்வாகத்தை விரிவுபடுத்தி அனைத்து மண்டலங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவது என்றும் அந்த பொறுப்பாளர்கள் அனைத்து மண்டலங்களின் செயற்பாடுகளை கவணிப்பதோடு அமீரக செயற்குழு உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தில் அமீரக பணிகளையும் கவனிப்பது என்றும் இவர்கள் அமீரக நிர்வகத்திற்கு தயாராகும் பட்சத்தில் அவர்களை அமீரக நிர்வாகத்திற்கு ஏற்றம் கொடுப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

ரமலான் மாதம் நெருங்குவதால் அமீரத்திற்கு தாயகத்தில் இருந்து ஒரு தாயியை அழைத்து மார்க்க பயான்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சில முக்கிய முடிவுகளுக்குப்பின் துவாவுடன் செயற்குழு முடிவுற்றது. வருகைதந்த அனைவரும் தங்களது பணிகளை பகிர்ந்துகொண்ட மன நிறைவோடும், எதிர்கால பணிகளின் கணவுகளோடும் சொந்த சகோதரர்களை சந்தித்த சந்தோசத்தோடு கலைந்துசென்றனர்