Tuesday, February 21, 2012


தமுமுக, ஜாக், இதஜ மற்றும் இயக்கம் சாரா தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமீரக வரலாற்றில் முதன்முறையாக தமிழ் இஸ்லாமிய நிகழ்ச்சியினை துபை அவ்காஃப் வளாக அரங்கில் ஏற்பாடு செய்தனர்.


இறையருளால் 10.02.2012 அன்று துபை அல்கூஸில் உள்ள அல் மனார் இஸ்லாமிய மையத்திலும் 17.02.2012 அன்று துபை அவ்காஃப் (இஸ்லாமியத்துறை) அரங்கிலும் ஜாக் அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் கோவை அய்யூப் அவர்களின் பயான் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர் கோவை அய்யூப் அவர்கள் 'இஸ்லாம் அன்றும் இன்றும்' என்ற தலைப்பிலும் மற்றும் 'அந்த நாள் வரும் முன்' என்ற தலைப்பிலும் மிக அருமையான உரை நிகழ்த்தினார்கள்.


நிகழ்ச்சியினை சமுதாய புரவலர் கீழக்கரை ரஃபி அஹ்மது, தமுமுக அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி மற்றும் தமுமுக அபுதாபி செயலாளர் பொறியாளர்.கீழை இர்பான், இ த ஜ கீழை ஜமீல் மற்றும் கமால், அதிரை ஜமால் உள்ளிட்டவர்களின் ஒருங்கிணைப்பில் மிக சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சிக்கு அமீரகத்தின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் வந்தனர். ஆண்களுக்கு சமமாக பெண்களும் கலந்து கொண்டனர். அரங்கம் நிரம்பி வழிந்தது.

இஸ்லாமிய அழைப்பாளர் பொதக்குடி ஜலால் அவர்களும் தமுமுகவின் அமீரக தலைமை நிர்வாகி பொறியாளர்.ஜெய்லானி அவர்களும் தமுமுக அபுதாபி தலைவர் பொதக்குடி தாஜுதீன் அவர்களும் மற்றும் சமுதாய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியினை ஜாக், தமுமுக, மமக, இதஜ மற்றும் இயக்கம் சாராத தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிக சிறப்பாக நடத்தினர். 

தமுமுகவின் நிர்வாகிகளான முகவை. இஸ்மாயில் இந்நிகழ்ச்சியின் அழைப்பிதழை வடிவமைத்தார். படம்  கீழை அஹ்மது.

அல்ஹம்துலில்லாஹ்!